Paristamil Navigation Paristamil advert login

குறுஞ்செய்தி!

குறுஞ்செய்தி!

9 மார்கழி 2018 ஞாயிறு 15:21 | பார்வைகள் : 14079


மழை இரவின் 
பெரும்தூக்கமும் தராத சுகம்...!
 
வெயில் நாளில்
மரநிழலும் கொடுக்காத ஆனந்தம்...!
 
கடும் தாகத்தில் 
குட நீரும் தீர்க்காத தாகம்...!
 
தென்றல் தொட்ட பொழுதில்
தேகமும் உணராத புத்துணர்சி...!
 
நகைச்சுவை நிரம்பிய
திரைப்படமொன்று வழங்காத புன்னகை...!
 
இவையெல்லாம் எனக்கும்
நொடிப்பொழுதில் கிடைக்கிறது...!
நீ எனக்கனுப்பும்
“ஹாய்” என்ற குறுஞ்செய்தியில்...
 

வர்த்தக‌ விளம்பரங்கள்