நீ தரும் காதல்!
22 பங்குனி 2019 வெள்ளி 08:56 | பார்வைகள் : 13339
மனதை நான்
மடித்தெங்கோ வைத்துவிட்டேன்...!
இடப்பக்க இதயம்
இயங்குவதின் அசைவில்லை...!
மூளைய தூக்கியெறிந்துவிட்டு
முட்டாள்போல் அலைகின்றேன்...!
பசி மறக்க
பழக தொடங்கிவிட்டேன்...!
பக்கத்திலிருந்து பேசினாலும்
பதியவில்லை செவிகளில்...!
தனியே பேசவும் சிரிக்கவும்
தயக்கமில்லை இப்போது...!
மனிதத்தை களைந்துவிட்டு
மற்றெதுவாகவோ மாறுவதாய் உணர்வு...!
இத்தனை சக்தியா...?
நீ தரும் காதலுக்கு...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan