Paristamil Navigation Paristamil advert login

காதலும் தோற்று மற...!!

காதலும் தோற்று மற...!!

28 சித்திரை 2019 ஞாயிறு 16:26 | பார்வைகள் : 6606


உன் பார்வைகளிலே

உயிர் வாழ்ந்துவிடுவேன் என
உன்னிடம் உருகியிருப்பாள்...!
 
மெல்லப்பேச்சும்,
செல்பேசி முத்தங்களுமாய்
அவள் இரவுகளை உனக்காய்
செலவழித்திருப்பாள்...!
 
ஏழு ஜென்மம் 
சேர்ந்து வாழ்வது,
எந்த பள்ளியில்
குழந்தையை சேர்ப்பது என
எல்லாவற்றையும் பேசியிருப்பாள்...!
 
உன் விரல்பிடித்து நடப்பது
சுகமென்றும்,
உன் குரல் கேட்டு வாழ்வதே
வரமென்றும் உளறியிருப்பாள்...!
 
இன்று...
அவள் இல்லாத தனிமையில்,
அவளை சுமக்கும் நினைவுகளுடன் நீ...!
 
மதுநீர் குடித்து,
விழிநீர் வடிக்க
காதலின் இழப்பு பெரிதில்லை...!
அது இதயம் திருடும் சிறு களவே...!!
 
ஆதலால்...
காதலும் தோற்று மற...
 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்