அவள் பெயரும்... அந்த குரலும்...!!
20 ஆவணி 2019 செவ்வாய் 16:26 | பார்வைகள் : 13589
கூட்டநெரிசலொன்றில்
நடந்துகொண்டிருக்கிறேன் நான்...!
அவள் பெயரைச்சொல்லி - யாரோ
அழைக்கும் சத்தம்
இரைச்சலை பிளந்துகொண்டு
இருகாதுகளில் நுழைகிறது...!
அப்படியே நின்றுவிட்டு
சுற்றும்முற்றும் பார்க்கிறேன்...!
அவளோ,
அழைத்தவரோ
அங்கிருப்பதற்கான
அடையாளமேதுமில்லை...!
மறுபடியும் பார்த்துவிட
மனம் சொல்கிறது...!
தேடும் கண்களுக்கு
தென்படவில்லை அவள்...!
எங்கிருந்து வந்ததந்த குரல்...?
ஒரு நொடியில் மறைந்தெங்கோ
சென்றுவிட்டாளா அவள்...??
யோசித்தகொண்டே மீண்டும்
நடக்கத்துவங்கினேன் நான்...!
ஆனால் அந்த கூட்டநெரிசலில்
அவளைத்தேடிக்கொண்டு
அங்கேயே நின்றுகொண்டிருந்தது...!
என் மனது...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan