திருமண வயது எது?
24 மாசி 2023 வெள்ளி 10:06 | பார்வைகள் : 10727
உண்மையில் கணவன்- மனைவி இருவருக்கும் குறைந்த பட்சம் 7 வயது, அதிகபட்சமாக 9 வயது இருக்கனும். அப்பத்தான் வாழ்க்கை சுகமாக இருக்கும்.
அதே போல பெண்ணுக்கு 23 வயதுக்குள் திருமணம், பிள்ளைக்கு 26வயதுக்குள் திருமணம் நடத்த வேண்டும். இதுதான் மிகச்சரியான நிலை என்பதை பல ஜாதகங்களை அலசியதில் தெரிந்தது.
பால்யவிவாகங்கள், 15-20வயது வித்யாசங்கள் கொடூரமானது தேவையற்றது. அதை ஒழித்ததில் நன்மை அதிகம். அதேநேரம் சரியான பருவத்தில் திருமணம் செய்யவில்லை எனில் வாழ்க்கை நரகமாகும்.
பெண் விரைவில் பக்குவம் அடைந்துவிடுகிறாள். ஆண் அவளிடமிருந்து 7 வயது தள்ளி பக்குவம் அடைகிறான்.
கணவன்- மனைவி சேர்க்கை தான் வம்ச விருத்தி மற்றும் குடும்பத்தின் ஒற்றுமை. இருவருக்கும் ஒரே வயது அல்லது 2-4 வயது வித்தியாசம் எனில் மேற்படி வாழ்க்கை பிரச்சனையாகவும் குழந்தை பாக்கியம் மிக குறைவாகவும் இருக்கும்.
மேலும் இன்றைய சூழல், சாப்பாட்டு முறைகளும் தாமத திருமணங்களும் குழந்தை பாக்கியத்தை குறைத்துவிடுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan