முக சுருக்கங்களை போக்கும்ஃ பேஸ் பேக்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 14837
தண்ணீரை அடிப்படை பொருளாக உபயோகித்து தயாரிக்கும் முக பேக்குகள் இந்த வகை பேஸ் பேக்குகள் முக சருமத்தை உறுதிப்படுத்தும். முக சுருக்கங்களை போக்கும்.
• ஆரஞ்ச் முக பேக் :
தேன் 1 மேஜைக்கரண்டி, ஆரஞ்சு ஜுஸ் 1 தேக்கரண்டி, முல்தானி மட்டி பொடி 1 தேக்கரண்டி, ரோஜா பன்னீர் 2 தேக்கரண்டி. முல்தானி மட்டியை பன்னீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு இதர பொருள்களை கலந்து களிம்பாக்கி கொள்ளவும். முகத்தில் தடவி உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கலந்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.
• தேன் பேக் :
தேன் 1/2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி, முல்தானி மட்டி பொடி 2 தேக்கரண்டி, தண்ணீர் 2 தேக்கரண்டி. முல்தானி மட்டியை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இத்துடன் தேனையும் எலுமிச்சையும் சேர்த்து முகத்தில் தடவிக் கொள்ளலாம். கால் மணி நேரம் கழித்து கழுவி விடவும்.
• ஆலிவ் ஆயில் பேக் :
பாதாம் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி, தண்ணீர் 2 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளேக்ஸ் 1 மேஜைக்கரண்டி. இரண்டு எண்ணெய்களையும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தனியாக கார்ன்ஃபிளேக்ஸ்ஸை கலந்து கொள்ள வேண்டும். இதில் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் கலவை சேர்க்கவும். நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவிக் கொண்டு உலர்ந்த பின் கழுவி விடவும்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1