நிலவிற்கு பயணம் செய்ய தயாராகும் இருவர்!!
1 பங்குனி 2017 புதன் 11:32 | பார்வைகள் : 14951
அமெரிக்க நாட்டில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம், விண்வெளி போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனம். அடுத்த ஆண்டு சந்திரனை சுற்றியுள்ள பகுதிக்கு 2 பேரை சுற்றுலாவாக அனுப்பி வைக்கவிருக்கிறது இந்நிறுவனம்.
பெயர் குறிப்பிடப்படாத அந்த 2 பேர், இந்த விண்வெளிப்பயணத்துக்கு பெரும் தொகையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் டெபாசிட் செய்து உள்ளனர்.
இது குறித்து, இந்நிறுவனத்தை சேர்ந்த எலோன் முஸ்க் கூறும்போது, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவின் ஒத்துழைப்பால் தான் இந்த திட்டம் சாத்தியம் ஆகிறது. அந்த இருவரும், அதிவேகமாக சூரிய மண்டலத்துக்குள் செல்வார்கள்” என குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் விண்வெளி சுற்றுலா செல்லக்கூடிய இருவரின் பெயர் மற்ரும் விவரங்களை வெளியிட மறுத்து விட்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan