20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்க முடியும்!
14 ஆனி 2017 புதன் 12:45 | பார்வைகள் : 13380
‘இன்னும் 20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்க முடியும்‘ என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பறக்கும் தட்டு மூலம் பூமிக்கு வந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
இந்த நிலையில் இன்னும் 20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளை மனிதர்கள் கண்டறிய முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பூமியை போன்று பல கிரகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
எனவே அங்கு வேற்று கிரகவாசிகள் வாழலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழக நிபுணர்களின் இந்த ஆய்வுக்கு நாசா உதவுகிறது.
எனவே இன்னும் 20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளின் நிலையை கண்டறிய முடியும். ஜேம்ஸ் வெப் விண்வெளி டெலஸ் கோப் மற்றும் சக்தி வாய்ந்த உபகரணங்கள் மூலம் இது சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan