நட்சத்திரம் ஒன்றிலிருந்து வெளியாகும் சமிக்ஞை கண்டுபிடிப்பு!
20 ஆடி 2017 வியாழன் 14:33 | பார்வைகள் : 12880
அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் இருந்து பல்வேறு சமிக்ஞைகள் வெளியாவது பூமியில் உள்ள வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளது.
எனினும் தற்போது பூமியிலிருந்து 11 ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு அப்பால் உள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து வெளியேறும் வினோத சமிக்ஞை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
Arecibo Observatory எனும் ரேடியோ தொலைகாட்டியின் ஊடாகவே இந்த சமிக்ஞை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த ரேடியோ சமிக்ஞையானது Ross 128 எனும் நட்சத்திரத்திலிருந்தே வெளிவருவதாக வானியலாளர்கள் நம்புகின்றனர்.
Puerto Rico பல்கலைக்கழக வானியலாளர்களே இதனை தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை அவதானித்துள்ளனர்.
இதேவேளை இந்த ரேடியோ சமிக்ஞை வெளியாவதற்கு ஏலியன்கள் தான் காரணம் என உறுதியாகக் கூற முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan