Paristamil Navigation Paristamil advert login

திமுக கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியே வர இதுதான் காரணம் - அமைச்சர் நிர்மல்குமார்

திமுக கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியே வர இதுதான் காரணம்  - அமைச்சர் நிர்மல்குமார்

1 ஆடி 2026 புதன் 11:38 | பார்வைகள் : 355


பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, அவரது மகன் ஆகியோர் இந்த நொடி வரை முயற்சி செய்வதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்..செய்தியாளர் சந்திப்புசென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஸ்டாலின், உதயநிதி, இபிஎஸ் முயற்சி

பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, அவரது மகன் ஆகியோர் இந்த நொடி வரை முயற்சி செய்கிறார்கள். திமுக கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியே வர இதுதான் காரணம்.  

மு.க.ஸ்டாலினே தொலைபேசியில் தொடர்புகொண்டு இபிஎஸ்-ஐ முதல்-அமைச்சராக்க பேசியதாக காதர் மொய்தீன் கூறி உள்ளார்..திமுக, அதிமுக சேர்ந்து பாஜகவிடம் சரண்டர் ஆகி ஒரு கேபினட் இடம் கேட்டு நிற்க போகின்றன. 2 வருடத்தில் திமுகவும் அதிமுகவும் பாஜகவில் இணைந்து விடுவர்.

ஸ்டாலினும் இபிஎஸ்-ம் வீட்டுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியை பெற்றுவிட்டு கட்சியை இணைத்து விடுவர். தமிழ்நாட்டில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சி தான் என்பது உறுதியாகி உள்ளது’ என்றார்.