Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., ஆட்சியில் ஊழல் செய்தது யார் யார்? விபரங்களை சேகரிக்கிறார் முதல்வர் விஜய்

தி.மு.க., ஆட்சியில் ஊழல் செய்தது யார் யார்? விபரங்களை சேகரிக்கிறார் முதல்வர் விஜய்

29 ஆனி 2026 திங்கள் 07:23 | பார்வைகள் : 392


தி.மு.க., ஆட்சி கால ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்தும், அவற்றுக்கு காரணமானவர்கள் யார் யார் என்பது குறித்தும், முதல்வர் விஜய் ஆய்வு செய்து வருகிறார். விரைவில் நடவடிக்கை பாயும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், கடந்த தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த முறைகேடு களை கண்டறிந்து வருகிறது.

ஒவ்வொரு துறையிலும், வெள்ளை அறிக்கை வெளியிட அரசு உத்தரவிட்டு உள்ளது.

உத்தரவு இதன் அடுத்த கட்டமாக, அரசு அலுவலர்கள் மீது, கடந்த ஐந்தாண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதிகாரிகளின் வெளிநாட்டு பயணம், பதவி உயர்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதி.

ஊழியர்கள் நியமனம், இடமாற்றம், காத்திருப்போர் பட்டியலில் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அனுப்பும்படி, அனைத்து துறை அலுவலர்களுக்கும், தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

மேலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் உதவிக்காக உருவாக்கப்பட்ட உதவியாளர் பதவி, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்ற நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், கருணை அடிப்படையில் பணி பெற்றவர்கள், துறை ரீதியாக உள்ள வழக்குகள், நிலம் கையகப்படுத்த வேண்டிய திட்டங்கள் போன்ற விபரங்களை அனுப்பி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தெரியவரும் இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், நிதி அமைச்சர் மரிய வில்சன் அளித்த பேட்டி:

மாநிலத்தின் வருவாய் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இனி வரும் நாட்களில், வருவாய் இழப்புகள் சரி செய்யப்படும். அந்த இழப்புகளை சரி செய்து விட்டாலே, எல்லாமே நன்றாக அமைந்து விடும்.

கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் நடந்த ஊழல், முறைகேடுகள் குறித்தும், அவற்றுக்கு காரணமானவர்கள் யார் யார் என்பது குறித்தும், முதல்வர் விஜய் ஆய்வு செய்து வருகிறார்.

யாரும் கவலைப்பட வேண்டாம். அனைவருக்கும் விரைவில் முடிவுகள் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.