சதமடித்து அயர்லாந்தை கதிகலங்க வைத்த சாமரி அதப்பத்து- இலங்கை இமாலய வெற்றி
24 ஆனி 2026 புதன் 12:15 | பார்வைகள் : 320
மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் அயர்லாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
பிரிஸ்டோலில் நடந்த இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய மகளிர் உலகக் கிண்ணப் போட்டி நடந்தது.
முதலில் ஆடிய அயர்லாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் எடுத்தது.
அணித்தலைவர் கேபி லீவிஸ் (Gaby Lewis) 59 (50) ஓட்டங்களும், அலிஸ் டெக்டர் 28 (21) ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 15.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ருத்ரதாண்டவம் ஆடிய அணித்தலைவர் சாமரி அதப்பத்து (Chamari Athapaththu) ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 106 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 17 பவுண்டரிகள்), இமேஷா துலானி 20 (27) ஓட்டங்களும் எடுத்தனர்.
சதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்த சாமரி அதப்பத்து ஆட்டநாயகி விருது பெற்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan