Paristamil Navigation Paristamil advert login

ரிலீஸ்க்கு தயாராகும் கார்த்தியின் சர்தார் -2 மற்றும் மார்ஷல்?

ரிலீஸ்க்கு தயாராகும் கார்த்தியின் சர்தார் -2 மற்றும் மார்ஷல்?

23 ஆனி 2026 செவ்வாய் 17:07 | பார்வைகள் : 146


தமிழ் சினிமாவில் மாஸ் மற்றும் கிளாஸ் என இரு தரப்பினரின் ஆதரவையும் பெற்று தனக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ள நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கதைத்தேர்வில் அதிக கவனம் செலுத்தி வரும் கார்த்தி, பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் அவரது வரவிருக்கும் படங்கள் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அந்த வகையில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், கார்த்தி நடிப்பில் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் மார்ஷல் திரைப்படத்தின் படப்பிடிப்பும் முழுவதுமாக முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் உருவாகும் கார்த்தி 30 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் ‘கார்த்தி 30’ திரைப்படம், நடிகர் கார்த்தியின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டாடா பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள புதிய படம் இறுதிக்கட்ட திட்டமிடலில் இருப்பதாகவும், அதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனுடன், கார்த்தியின் வெற்றி படங்களின் தொடர்ச்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் தொடர்ச்சியாக தீரன் 2, மேலும் ஹிட் 4 மற்றும் மார்ஷல் 2 போன்ற திரைப்படங்களும் கார்த்தியின் எதிர்கால திட்டங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், முன்னணி இயக்குநர்களான சுந்தர் சி, பாண்டிராஜ், மாரி செல்வராஜ், போயபட்டி ஸ்ரீனு, விவேக் ஆத்ரேயா மற்றும் பிரசாந்த் வர்மா ஆகியோருடனும் கார்த்தி புதிய படங்களுக்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வரும் ஆண்டுகளில் கார்த்தியின் திரைப்பயணம் மேலும் பிரம்மாண்டமாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.