தலைவர் 173 அப்டேட் வெளியானது !
23 ஆனி 2026 செவ்வாய் 16:56 | பார்வைகள் : 134
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்து ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது ரஜினியின் 173 வது திரைப்படமாகும். இந்த படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது இயக்குனர் மாறிவிட்டார்.
இந்நிலையில், இந்த படத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டு ஜூன் 24ம் தேதியான நாளை காலை 10 மணிக்கு இந்த படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாவதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
பேனா போன்ற ஏதோ ஒரு பொருளை ரஜினிகாந்தின் கைபிடித்திருக்க அதிலிருந்து ரத்தம் வழிவது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை பார்க்கும் போது கண்டிப்பாக இதுவும் ஒரு பக்கா ஆக்சன் படமாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan