AK64 படம் தொடர்பில் அதிரடி அறிவிப்பு...
23 ஆனி 2026 செவ்வாய் 16:55 | பார்வைகள் : 143
அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். எனவே குட் மார்னிங் படத்திற்கு பின் அவர்களின் புது படம் இப்போது வரை துவங்கப்படவில்லை. ஒருபக்கம், அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் அந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை.
ஆந்திரா மும்பை என பல ஊர்களுக்கும் சென்று தயாரிப்பாளர்களை தேடியும் கிடைக்கவில்லை. ஏனெனில் அஜித் படத்திற்கு உள்ள வியாபாரத்தை கணக்கு போட்ட தயாரிப்பாளர்கள் அஜித்துக்கு அவ்வளவு சம்பளத்தை கொடுக்க முடியாது என சொல்லிவிட்டார்கள்..
அஜித்தும் விடாப்படியாக இருந்ததால் இந்த படம் டேக் ஆப் ஆகாமல் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அஜித் தனது சம்பளத்தை 160 கோடியாக குறைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அப்போதும் இந்த படத்தை தயாரிக்க யாரும் முன் வரவில்லை.
இந்நிலையில்தான் இந்த படத்தை தானே சொந்தமாக தயாரிக்க அஜித் முடிவு செய்திருப்பதாகவும் நாளை இந்த படம் தொடர்பான தொடர்பான அப்டேட் வழியாகும் எனவும் தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது. குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அஜித்தின் புது படம் எப்போது துவங்கும் என அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan