இலங்கையில் பாதுகாவலர்களைக் கட்டிவைத்து வங்கியில் கொள்ளை...!
23 ஆனி 2026 செவ்வாய் 14:47 | பார்வைகள் : 161
மூன்று நபர்கள் மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதிலிருந்த பெருமளவிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று (23) அதிகாலை 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்துள்ள இக்குழுவினர், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிவைத்துவிட்டு, வங்கியின் பின்புறம் உள்ள குளியலறையின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர், அவர்கள் அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூன்று சந்தேகநபர்களும் இதுவரையில் கைது செய்யப்படாததுடன், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan