ரூ.12 கோடி குறைவான ஊதியம் - இருந்தும் டெல்லி அணிக்கு செல்லும் ரிஷப் பந்த்
23 ஆனி 2026 செவ்வாய் 15:06 | பார்வைகள் : 135
ரூ.12 கோடி குறைவான ஊதியத்துடன் ரிஷப் பந்த் டெல்லி அணியில் இணைய உள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி(LSG), 4 வெற்றி 10 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இதன் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பந்த்தை அணி நிர்வாகம் நீக்க உள்ளதாகவும், அவர் மீண்டும் டெல்லி கேபிட்டல்ஸ்(DC) அணிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.
தற்போது ரிஷப் பந்த், LSG அணியில் இருந்து விலகி மீண்டும் டெல்லி அணிக்கு செல்வது உறுதியாகியுள்ளது.
2016 முதல் 2024 வரை டெல்லி அணியில் இருந்த ரிஷப் பந்த் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
2025 ஐபிஎல் ஏலத்தில், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஏலத்தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்தை LSG அணி வாங்கியது.
தற்போது ரூ.15 கோடிக்கு மீண்டும் டெல்லி அணியில் இணைய உள்ளார். இதன் மூலம், ரூ.12 கோடி குருநாத் ஊதியத்திற்கு டெல்லி அணிக்கு திரும்புகிறார்.
அதே போல், 2022 ஐபிஎல் தொடர் முதல் டெல்லி அணியில் இருந்த குல்தீப் யாதவ், தற்போதைய ஊதியமான ரூ.13.50 கோடிக்கு லக்னோ அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan