ஆள் பிடிக்கும் வேலையை கைவிட்டு ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள்: உதயநிதி
23 ஆனி 2026 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 222
ஆள் பிடிக்கும் வேலையை கைவிட்டு, ஆட்சி நிர்வாகத்தில், முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தினார்.
சட்டசபையில் நேற்று, கவர்னர் உரை மீதான விவாதத்தை முடித்து வைத்து, அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்த, 'நான் முதல்வன்' திட்டத்தை முடக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபாடி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த 136 கோடி ரூபாய் குறுவை தொகுப்பு போதாது என, விவசாயிகள் போராடி வருகின்றனர். எனவே, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை முதல்வர் விஜய் அழைத்துப் பேசி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
அரசு பள்ளிகளில் குத்து பாடல்களை போட்டு, 'ரீல்ஸ்' போடும் மோசமான செயல்களில், த.வெ.க.,வினர் ஈடுபட்டுள்ளனர்; இது தடுக்கப்பட வேண்டும். த.வெ.க.,ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கும்மிடிப்பூண்டியில், 3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நாம் உ.பி., - ம.பி., போன்ற வட மாநிலங்களில் இருக்கிறோமா என்று அச்சமாக உள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு படை துவங்கப்பட்ட அடுத்த நாளே, பெண் காவலர் ஒருவருக்கு மூன்று பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். கடந்த 12ம் தேதி, 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. இதையெல்லாம் தடுக்க வேண்டிய சிங்கப்பெண் சிறப்பு படையினர், 'ரீல்ஸ்' போட்டு வருகின்றனர்.
ஆறு மாதங்கள் நேரம் எடுத்துக் கொண்டு, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வரை, நாங்கள் காத்திருக்க முடியாது; நாடும் தாங்காது. இதுபற்றி கேள்வி எழுப்பினால், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் விஜய் பதில் சொல்வது இல்லை. சட்டம் - ஒழுங்கை காக்க முக்கியத்துவம் கொடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமைச் செயலர் தலைமையில், தமிழக முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு கமிஷன் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும் என, கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது. அப்படியெனில், இப்போது சிறப்பாக செயல்பட்டு வரும், 'வழிகாட்டி' நிறுவனம் என்னவாகும் என்பதை, முதல்வர் விஜய் தெளிவுப்படுத்த வேண்டும்.
ஆள் பிடிக்கும் வேலையை கைவிட்டு, ஆட்சி நிர்வாகத்தில், முதல்வர் விஜய் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மன்னிப்பு கேட்குமாறு அமைச்சர் வலியுறுத்தல்
பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, ''சிங்கப்பெண் சிறப்பு படை தமிழக அரசின் பொக்கிஷம். அவர்களை திரும்ப திரும்ப சிறுமைப்படுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது. சிங்கப்பெண் சிறப்பு படையை தவறாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்,






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan