Paristamil Navigation Paristamil advert login

திரிணமுல் காங்., தலைவர் பதவியிலிருந்து மம்தா நீக்கம்; அதிருப்தி குழு அதிரடி

திரிணமுல் காங்., தலைவர் பதவியிலிருந்து மம்தா நீக்கம்; அதிருப்தி குழு அதிரடி

23 ஆனி 2026 செவ்வாய் 08:36 | பார்வைகள் : 210


மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முன்னதாக நடந்த சட்டசபை தேர்தல் தோல்வி எதிரொலியாக, முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சி நிர்வாகிகள் பலர் வெளியேறினர். மம்தா பானர்ஜியால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரதா பானர்ஜி தலைமையில், 60 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் அதிருப்தி குழுவாக இயங்கி வருகிறது.

மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக ரிதபிரதா பானர்ஜி செயல்பட்டு வரும் நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், திரிணமுல் காங்.,கிற்கு புதிய தேசிய செயற்குழு அமைக்கப்பட்டது. கட்சி தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி நீக்கப்பட்டார்.

புதிய தலைவராக ஹவுரா மத்திய சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வான அரூப் ராய், துணைத் தலைவர்களாக பிர்ஹாத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ், ரத்தின் கோஷ், சபினா யாஸ்மின் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

பொதுச்செயலர்களாக ரிதபிரதா பானர்ஜி, ஜாவேத் கான், சந்தீபன் சாஹா ஆகியோரும் பொருளாளராக அன்சாரி உள்ளிட்டோர் பொறுப்பேற்றுள்ளனர்.