ரஜினியின் 173வது படத்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து?
22 ஆனி 2026 திங்கள் 16:23 | பார்வைகள் : 151
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்த படத்தில் ஏற்கனவே மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார்லும் பாலிவுட்டிலிருந்து ஹிருத்திக் ரோஷனும் ஒரு கேமியோ வேடத்தில் நடிக்கவுள்ளார்.
விரைவில் அது தொடர்பான ஷூட்டிங் துவங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு பின் ரஜினியின் 173வது படம் தொடங்கவுள்ளது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களை இயக்கியவர். இளம் இயக்குனருடன் ரஜினி கைகோர்ப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது..
இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் பூந்தமல்லியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு தற்போது தொடங்கியிருக்கிறது. அதேநேரம் முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்காத நிலையில் மற்ற நடிகர்களை வைத்து காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. மேலும் ஷூட்டிங்கில் ரஜினி இணையும் முதல் நாளே மாஸான ஓப்பனிங் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan