Paristamil Navigation Paristamil advert login

விஜய் ரசிகர்களை ஏமாற்றிய ஜனநாயகன்...

விஜய் ரசிகர்களை ஏமாற்றிய ஜனநாயகன்...

22 ஆனி 2026 திங்கள் 16:03 | பார்வைகள் : 210


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன்.  கே.வி.என் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த வருட பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவித்தார்கள். ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை..

இப்போது ஆறு மாதங்களாகியும் தற்போது வரை இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இந்த படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை என யாருக்கும் தெரியவில்லை. இந்த படம் எப்போது வெளியாகும் என தெரியாத நிலையில் இந்த படத்திற்காக வினியோகஸ்தர்களிடம் வாங்கிய பணத்தை அவர்களிடமே தயாரிப்பாளர் இன்று திருப்பி கொடுப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியானது

ஒருபக்கம் படம் எப்போது வெளியாகும் என்கிற அப்டேட் விஜயின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி எந்த தகவலும் வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. இதையடுத்து ஜனநாயகன் படத்தின் ரிலீச் இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போகலாம் என கணிக்கப்படுகிறது.