Paristamil Navigation Paristamil advert login

கத்தார் எரிபொருள் ஆலையில் பயங்கர வெடிப்பு - 54 பேர் படுகாயம், 18 பேர் மாயம்

கத்தார் எரிபொருள் ஆலையில் பயங்கர வெடிப்பு - 54 பேர் படுகாயம், 18 பேர் மாயம்

22 ஆனி 2026 திங்கள் 18:05 | பார்வைகள் : 128


கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்து சம்பவத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கத்தாரின் ராஸ் லபான் நகரில் அமைந்துள்ள பர்சான் எரிவாயு விநியோக ஆலையில் நேற்று இரவு 21.06.2026  எதிர்பாராத பயங்கர வெடிப்பு விபத்து ஏற்பட்டது.

இந்த வெடிப்பு விபத்தில் கிட்டத்தட்ட 54 பேர் தீ காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தினால் ஏற்பட்ட கரும்புகை பல கிலோமீட்டர் தூரத்திற்கு சூழந்தது.

அத்துடன் பல மணி நேரம் போராடி தீயை அணைத்த மீட்பு படையினர், 18 தொழிலாளர்கள் வரை காணாமல் போயிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போனவர்களை தொழிற்சாலையில் இடிபாடுகளில் மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த எரிவாயு ஆலை சமீபத்திய ஈரானிய தாக்குதலில் சேதமடைந்த நிலையில் கடந்த பல வாரங்களாக மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்காக ஆலையை திறந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே சமயம் இந்த விபத்தில் எந்தவொரு விஷவாயு கசிவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.