Paristamil Navigation Paristamil advert login

மகளிர் டி20 உலகக்கிண்ணம் - தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வி

மகளிர் டி20 உலகக்கிண்ணம் - தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வி

22 ஆனி 2026 திங்கள் 15:39 | பார்வைகள் : 184


மகளிர் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலகக்கிண்ணப் போட்டி மான்செஸ்டரில் நடந்தது.  

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 158 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்ம்ரிதி மந்தனா 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சொதப்ப, ஷபாலி வெர்மா 31 (15) ஓட்டங்களும், தீப்தி ஷர்மா 29 ஓட்டங்களும் எடுத்தனர்.

மரிசன்னே கப், ஷாப்னின் இஸ்மாயில் தலா 2 விக்கெட்டுகளும், லாபா, காகா, நாடினே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 19.1 ஓவர்களில் 161 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய மரிசன்னே கப் (Marizanne Kapp) 45 பந்துகளில் 81 ஓட்டங்கள் விளாசினார். தஸ்மின் பிரிட்ஸ் 40 ஓட்டங்கள் எடுத்தார்.

நடப்பு தொடரில் இந்திய அணியின் முதல் தோல்வி இதுவாகும். அடுத்ததாக 25ஆம் திகதி வங்காளதேசத்தை எதிர்கொள்ள உள்ளது.