பிலிப்பின்ஸில் பாடசாலையொன்றில் பயங்கரம் - 3 மாணவர்கள் பலி
22 ஆனி 2026 திங்கள் 12:27 | பார்வைகள் : 280
பிலிப்பின்ஸில் பாடசாலையொன்றில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள அரசு நடத்தும் உயர்நிலைப் பாடசாலையில் இன்று 22.06.2026 இருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளரென பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நடந்த உயர்நிலைப் பாடசாலையின் மாணவர் ஒருவர் உட்பட, இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பாடசாலையில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan