Paristamil Navigation Paristamil advert login

இன்று மீண்டும் சட்டசபை கூட்டம்; புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

இன்று மீண்டும் சட்டசபை கூட்டம்; புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

22 ஆனி 2026 திங்கள் 08:02 | பார்வைகள் : 321


இரண்டு நாள் விடுமுறைக்கு பின், இன்று சட்டசபை மீண்டும் கூடும் நிலையில், புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின், கவர்னர் உரையுடன் சட்ட சபையில் முதல் கூட்டம், கடந்த 18ம் தேதி தொடங்கியது. தி.மு.க., ஆட்சியில் கவர்னர் ரவியை போன்று அரசிற்கு குடைச்சல் தராமல், கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தன் உரையை நிகழ்த்தி சென்றார். இது, எதிர்க்கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்டத்தில், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை, முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.

சட்டசபையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க, தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை. விடுமுறை முடிந்து சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. கவர்னர் உரை மீதான விவாதம் இன்று தொடர்கிறது.

முதல்வர் விஜயின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சட்டசபையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.