அரசியல் கட்சியாகிறது வி தி லீடர்ஸ்; தேர்தலில் போட்டியிடவும் திட்டம்
22 ஆனி 2026 திங்கள் 06:56 | பார்வைகள் : 331
தி லீடர்ஸ் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளோம் ''என அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கூறினார்.
திருநெல்வேலியில் அவர் கூறியதாவது:
போதை கலாசாரத்திற்கு எதிராக ஜூலை 19-ம் தேதி திருச்செந்துாரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அண்ணாமலை பங்கேற்கிறார். எங்கள் அமைப்பு எந்த அரசியல் கட்சிக்கும் பினாமி அமைப்பு அல்ல. தமிழர்களை முன்னிறுத்தி தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
தமிழக வெற்றி கழக அரசு செயல்படுத்தி வரும் சில திட்டங்களை வரவேற்கிறோம். குறிப்பாக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து இளம் அமைச்சர்களை நியமித்திருப்பது பாராட்டத்தக்கது. அதேநேரத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கும் திராவிட கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.
தற்போது அமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். 'வி தி லீடர்ஸ்' அமைப்பை விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்.எதிர்கால அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக 'வி தி லீடர்ஸ்' உருவெடுக்கும் என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan