29 பந்துகளில் 94 ரன்! சதத்தை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி - இலங்கை வீரரின் சாதனை முறியடிப்பு
21 ஆனி 2026 ஞாயிறு 16:28 | பார்வைகள் : 225
இலங்கை ஏ அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா ஏ அணி 377 ஓட்டங்கள் குவித்தது.
இந்தியா ஏ, இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி தம்புள்ளையில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி வாணவேடிக்கை காட்டினார்.
இலங்கை பந்துவீச்சை சிதறடித்த அவர், 29 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் முதல் சதத்தை தவறவிட்டார். என்றாலும் இலங்கை வீரர் கௌசல்யா வீரரத்னே 12 பந்துகளில் அரைசதம் அடித்த 20 ஆண்டுகால சாதனையை, 11 பந்துகளில் முறியடித்தார்.
அணித்தலைவர் திலக் வர்மா 67 ஓட்டங்களும், ருதுராஜ் கெய்க்வாட் 40 ஓட்டங்களும், அனுகுல் ராய் 39 ஓட்டங்களும் விளாச இந்திய அணி 377 ஓட்டங்கள் குவித்தது.
இலங்கை அணியின் தரப்பில் குகதாஸ், ரவிந்து மற்றும் வனுஜா தலா 2 விக்கெட்டுகளும், துலாஜ், சஹன் மற்றும் மொஹம்மது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan