பிரட் அல்வா...
21 ஆனி 2026 ஞாயிறு 10:54 | பார்வைகள் : 450
திருமணங்கள் மற்றும் விசேஷ வீடுகளில் பரிமாறப்படும் சுவையான கல்யாண வீட்டு பிரட் அல்வாவை மிகக் குறைந்த நேரத்தில், அதேநேரம் நாவில் கரையும் சுவையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று தான், வாங்க பார்க்கலாம்...
தேவையான பொருட்கள் :
பால் பிரட் துண்டுகள் - 16
பால் - 1.5 கப்
சர்க்கரை - 1 கப்
முந்திரி - 10
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்
எண்ணெய் மற்றும் நெய் - தேவையான அளவு
தண்ணீர் - ½ கப்
செய்முறை :
முதலில் பிரட் துண்டுகளில் உள்ள ஓரத்தை நீக்கிவிட்டு துண்டு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு சூடானதும் அடுப்பின் தீயை குறைத்து அதில் பிரட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் வறுத்த பிரட் துண்டுகளில் உள்ள எண்ணெய்களை சமையல் டிஸ்ஸுவை வைத்து முழுவதுமாக நீக்கி அதேபோல் அனைத்து பிரட் துண்டுகளையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் வாணலி வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் அதில் முழு முந்திரி பருப்பையும் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் 1 கப் சர்க்கரை மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை கலந்து சர்க்கரை பாகு கொப்பளிக்கும் வரை குறைந்த வெப்பத்தில் சமைக்கவும்.
பிறகு அதில் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்துவிட்டு சர்க்கரை பாகு நன்கு ஒட்டும் பதத்திற்கு வந்தவுடன் வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை போட்டு கொள்ளுங்கள்
அவற்றை மெதுவாக சிறிய துண்டுகளாக உடைத்து, சர்க்கரை பாகு பிரட் துண்டுகளால் உறிஞ்சப்படும் வரை நன்றாக ககலந்து பின்னர் அதில் பால் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
பிரட் துண்டுகள் சில மென்மையாகவும் சில மொறுமொறுப்பாகவும் மாறத் தொடங்கும் வரை குறைந்த தீயில் சமைத்து பால் முழுமையாக உறிஞ்சப்பட்டு அல்வா நிலைக்கு வரும் வரை சுமார் 8-10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
அல்வாவில் இருந்து எண்ணெய் மற்றும் நெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து பிறகு அதில் வறுத்த முந்திரி பருப்பை போட்டு நன்றாக கலந்தால் சுவையான பிரட் அல்வா சாப்பிட ரெடி.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan