பாதுகாப்பு பணியில் 5000 காவல்துறையினர்: இசை விழாவை முன்னிட்டு பரிசில் பாதுகாப்பு தீவிரம்!!
21 ஆனி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 331
Fête de la Musique விழாவை முன்னிட்டு, Paris மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இசை விழாவிற்காக 4,800 காவல்துறையினரும் 2,500 தீயணைப்பு படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பரிஸ் காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடும் வெப்ப அலை நிலவும் சூழ்நிலையில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீரில் மூழ்கும் அபாயங்களைத் தவிர்க்கும் வகையில், கடற்படை பிரிவின் 10 படகுகளும் தீயணைப்பு படையினரின் 8 படகுகளும் Seine ஆற்றுப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. மேலும், Seine ஆற்றங்கரையில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் திங்கட்கிழமை காலை 8 மணி வரை அனுமதியில்லா கூட்டங்கள், பேரணிகள் மற்றும் அணிவகுப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, Météo-France வெளியிட்ட தகவலின்படி, Île-de-France உட்பட 35 மாவட்டங்களுக்கு கடும் வெப்ப அலை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அண்மைக் காலங்களில் பதிவான மிக உயர்ந்த எச்சரிக்கை அளவாகக் கருதப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan