டொமினிக்கன் குடியரசில் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து
20 ஆனி 2026 சனி 16:01 | பார்வைகள் : 201
டொமினிக்கன் குடியரசின் புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலாத்தலமான பயாஹிபே பகுதியில் அமைந்துள்ள சொகுசு விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இத்தாலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,
சுமார் 1,700 சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் பிரான்செஸ்கா வாலண்டினோ என்ற இத்தாலிய பெண் சுற்றுலாப் பயணி உயிரிழந்துள்ளதாக அவசர கால சேவைப் பிரிவு தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள "விவா விண்டம் டொமினிகஸ் பீச்" என்ற ஹோட்டலிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த கூரை அமைப்புகளின் எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை மற்றும் அங்கு வீசிய பலத்த காற்று காரணமாகவே தீ அதிவேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது என்பது ஆரம்பகட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan