Paristamil Navigation Paristamil advert login

ஈரானின் உச்ச தலைவரை கிண்டலாக சாடிய அமெரிக்க அதிபர்

ஈரானின் உச்ச தலைவரை  கிண்டலாக சாடிய அமெரிக்க அதிபர்

20 ஆனி 2026 சனி 11:49 | பார்வைகள் : 169


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை மேந்கொண்டது. அதனை தொடர்ந்து ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் மீது தனது எதிர் தாக்குதலை நடத்தியது.

தற்பொழுது போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் இரு தரப்பினரிடையே இடம்பெற்று வருகின்றது.

சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா அல் கமெனி தெரிவித்த ஒரு கருத்து குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டலான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது 'ட்ரூத்' (Truth) கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"ஏமாற்றத்தின் காரணமாகவே அமெரிக்கா ஈரானுடன் சமாதானப் பாதையில் நுழைந்தது" என்று உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த டிரம்ப், அந்த ஏமாற்றம் ஈரானுடையது, தன்னுடையது அல்ல என்று கூறியுள்ளார்.

"அவர்கள் முடித்துவிட்டார்கள் - இந்த 60 நாள் ஆட்டத்தை நாம் விளையாடுவோம்," என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.