Paristamil Navigation Paristamil advert login

வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன்? நிதி அமைச்சர் சொல்வது இதுதான்!

வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன்? நிதி அமைச்சர் சொல்வது இதுதான்!

20 ஆனி 2026 சனி 05:14 | பார்வைகள் : 175


முதல்வர் விஜய் கூறியபடி, சட்டசபை கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது,'' என, நிதி அமைச்சர் மரியவில்சன் கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

* அ.தி.மு.க., - சம்பத்குமார்: சட்டசபை விதியை மீறி, வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சட்டசபை நடக்கும் தேதியை அறிவித்த பின், சபையில் தான் வெளியிட்டு இருக்க வேண்டும். அவசரமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் ஏன் என்று தெரியவில்லை.

* அமைச்சர் மரியவில்சன்: வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம்; அரசின் நிதி நிலைமை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் என்று, பதவி ஏற்பின் போது முதல்வர் விஜய் கூறினார். அதன்படி, சட்டசபை முதல் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட, தி.மு.க., ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டுள்ளது. இதுவரை இருந்த முதல்வர்கள் யாரும், ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என்று சொல்லவில்லை. அந்த திராணியும் தில்லும் இருந்ததால் தான், அனைவருக்கும் தெரியும்படி, வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

வெள்ளை அறிக்கையை மக்கள் வரவேற்கின்றனர்; எதிர்கட்சிகள் தான் எதிர்க்கின்றன. பைபிளில் பழைய ஏற்பாட்டில், ஒரு ஜோசப் இருப்பார்; புதிய ஏற்பாட்டில், ஒரு ஜோசப் இருப்பார். இப்போது வந்துள்ளவர் மூன்றாவது ஜோசப். மக்களுக்கு அனைத்தும் வெளிப்படையாக தெரிய வேண்டும் என்பதற்காகவே, வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.

*  சட்டசபை அ.தி.மு.க., தலைவர் இபிஎஸ்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டாம் என்று கூறவில்லை. சட்டசபை தேதியை அறிவித்து விட்டு, அதை சபையில் அறிவிக்காதது ஏன் என்று கேட்டார். சட்டசபை மரபுபடி, அதை சபையில் தான் வெளியிட்டு இருக்க வேண்டும் என்ற கருத்தை சொன்னார்.

* அ.தி.மு.க., - சம்பத்குமார்: 'சாத்தியமானதை மட்டும் தான் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறோம்' என, பிரசாரத்தில் விஜய் கூறினார். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு, 2,500 ரூபாய் தரவில்லை. அது தொடர்பான விபரங்கள், கவர்னர் உரையில் இடம் பெறவில்லை.

*  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:  பட்ஜெட் குறித்தும், மானிய கோரிக்கை குறித்தும், தொகுதி பிரச்னை குறித்தும், ஒரே நேரத்தில் கேள்வி கேட்க, எம்.எல்.ஏ., விரும்புகிறார். விரைவில் பட்ஜெட், மானிய கோரிக்கை தாக்கல் செய்யும்போது, தேர்தல் அறிக்கைகள் தொடர்பான பதிலை நாங்கள் கொடுப்போம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.