Paristamil Navigation Paristamil advert login

தயாரிப்பாளராக மாறும் ஹெச்.வினோத்?

தயாரிப்பாளராக மாறும் ஹெச்.வினோத்?

19 ஆனி 2026 வெள்ளி 17:07 | பார்வைகள் : 564


சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் தடம் பதித்து, முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் ஹெச். வினோத். எதார்த்தமான கதைக் களம், விறுவிறுப்பான திரைக்கதைக்கு பெயர் போன இவர், அடுத்தடுத்து கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று', சூப்பர் ஸ்டார் அஜித்தை வைத்து  நேர்கொண்ட பார்வை ,  வலிமை ,  துணிவு  என ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்து கோலிவுட்டின் டாப் இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.

ஹெச். வினோத் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தில், விஜய் டிவியின்  பிக்பாஸ்  சீசன் 5 டைட்டில் வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே நட்புனா என்னனு தெரியுமா  போன்ற படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்தாலும், ராஜுவுக்கு ஹீரோவாக இதுவொரு மிக முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்த படத்தின் மூலம் ராஜு ஜெயமோகன் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். ஏற்கனவே இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ராஜு, இந்த புதிய படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடிக்க உள்ளார். ஹெச். வினோத் போன்ற ஒரு முன்னணி இயக்குநர், ராஜுவின் கதையை நம்பி தயாரிக்க முன்வந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஹெச். வினோத் - ராஜு இணையும் இந்த புதிய திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகாமல், நேரடியாக முன்னணி ஓடிடி தளமான 'ஜியோ ஹாட்ஸ்டார்' தளத்தில் பிரீமியர் செய்யப்பட உள்ளது.