நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு - இளைஞர் ஒருவர் கைது
19 ஆனி 2026 வெள்ளி 14:01 | பார்வைகள் : 215
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிற்பகல் 3.40 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வழிப்போக்கர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடினர்.
NBA சாம்பியனான நியூயார்க் நிக்ஸ் அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக மன்ஹாட்டன் தெருக்களில் ரசிகர்கள் ஏராளமானோர் கூடி இருந்தனர்.
இந்த நிகழ்வின் பாதுகாப்பு பணிகளுக்காக கிட்டத்தட்ட 10,000 பொலிஸார் அப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக அங்கு மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிஸார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 17 வயது இளைஞரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் விசாரணை தொடர்பான எந்தவொரு விரிவான தகவலும் இதுவரை அதிகாரிகளிடம் இருந்து தெரிவிக்கப்படவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan