சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி!: பிரதமர் மோடி
19 ஆனி 2026 வெள்ளி 11:24 | பார்வைகள் : 179
ஏ.ஐ., தொழில்நுட்பம், மனிதர்களை எந்தளவுக்கு மேம்படுத்துகிறது என்பதில்தான் அதன் உண்மையான வெற்றியே அடங்கியுள்ளது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி-7 மாநாட்டின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவுத் திறன் எனப்படும், ஏ.ஐ., குறித்த அமர்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
உலக நாடுகள் மத்தியில் தற்போது மிக முக்கியமான பேசுபொருளாக ஏ.ஐ., தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது. மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை இதற்கு உண்டு. இது உலகறிந்த உண்மை.சாதாரண, சாமானிய மனிதர்களுக்கு எந்தளவுக்கு நன்மைகளை வழங்கி, அவர்களை மேம்படுத்துகிறது என்பதில்தான் ஏ.ஐ.,யின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan