Paristamil Navigation Paristamil advert login

செம்மணி மனித புதைகுழி - குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழி - குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக்கூடுகள் மீட்பு

18 ஆனி 2026 வியாழன் 17:44 | பார்வைகள் : 314


செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஒரு குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் புதிதாக 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (18) திகதி நடைபெற்றது.

சான்று பொருட்களாக சிறு பாசிமணி துண்டு, கை வளையல், ஆணிகள் பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளன.

அதவேளை பாரிய உலோக துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதற்குள் எலும்புக்கூடுகள் காணப்படுவதனால், அதனை பக்குவமாக சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 387 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 367 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.