இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
18 ஆனி 2026 வியாழன் 16:21 | பார்வைகள் : 222
இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச தங்க சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களின் தாக்கம் காரணமாக, உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று நண்பகல் இரண்டாம் முறையாகக் குறைவடைந்துள்ளது.
அதன்படி, இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தங்க விலை விபரங்கள்:
தற்போதைய சந்தை நிலவரங்களின்படி தங்கத்தின் புதிய விலை விபரங்கள் பின்வருமாறு:
24 கரட் தங்கம் (ஒரு பவுண்): ரூ. 391,000
22 கரட் தங்கம் (ஒரு பவுண்): ரூ. 359,700
கிராம் அடிப்படையிலான விலை விபரங்கள்:
24 கரட் தங்கம் (1 கிராம்): ரூ. 48,875
22 கரட் தங்கம் (1 கிராம்): ரூ. 44,962
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலைகளில் தொடர்ந்தும் மாற்றங்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan