கிளிநொச்சியில் பண மோசடி! வெளிநாட்டு வேலை தருவதாகக் கூறி பல லட்சம் சுருட்டிய நபர் அதிரடி கைது!
18 ஆனி 2026 வியாழன் 12:23 | பார்வைகள் : 247
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து ரூ. 4,990,000/- (நாற்பத்தொன்பது இலட்சத்து தொண்ணூறாயிரம் ரூபாய்) மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், பிரதேச விசேட குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன் விளைவாக, 2026.06.16 அன்று நண்பகல், இக்குற்றச்செயலுடன் தொடர்புடைய, இலங்கைப் பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை சந்தேக நபராக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 32 வயதுடைய கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவராவார்.
இந்த பண மோசடி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பிரதேச குற்ற விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan