Paristamil Navigation Paristamil advert login

எஸ்கலேட்டரில் எதிர்திசையில் சென்றதற்காக ஒரு பயணிக்கு 200 யூரோக்கள் அபராதமா?

எஸ்கலேட்டரில் எதிர்திசையில் சென்றதற்காக ஒரு பயணிக்கு 200 யூரோக்கள் அபராதமா?

17 ஆனி 2026 புதன் 22:25 | பார்வைகள் : 472


பரிஸில் உள்ள Magenta நிலையத்தில் ஒரு பெண் பயணி, எஸ்கலேட்டரின் திசையை தவறாக பயன்படுத்தியதற்காக தமக்கு 200 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டதாக சமூக வலைதளமான X-ல் பதிவு செய்தார். இந்த பதிவு விரைவில் பரவி, பலரின் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் பெற்றது.

அந்த பயணி, RER E ரயிலை அடைய முயன்றபோது தவறுதலாக எதிர்திசை எஸ்கலேட்டரில் சென்றதாக கூறினார். இதற்காகவே அதிகாரிகள் அபராதம் விதித்ததாக அவர் குற்றம்சாட்டினார். ஆனால் SNCF நிறுவனம் வேறுபட்ட விளக்கத்தை அளித்தது. 

அதாவது, சம்பந்தப்பட்ட பயணிகள் டிக்கெட் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றபோது எஸ்கலேட்டரை பயன்படுத்தி திரும்பிச் சென்றனர்; மேலும் அவர்கள் பயண விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அபராத ரசீதில் “ஒழுங்கற்ற முறையில் ஏறுதல் அல்லது இறங்குதல்” என்ற காரணம் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது ஏன் பதிவு செய்யப்பட்டது என்பதை SNCF விசாரித்து வருகிறது. விசாரணை முடியும் வரை 200 யூரோக்கள் அபராதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.