Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

18 ஆனி 2026 வியாழன் 10:31 | பார்வைகள் : 191


எம்எல்ஏ பதவியை சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

விராலிமலை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமை செயலகத்தில் சபாநாயகரை சந்தித்தார். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். இதனை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 5 ஆக உயர்ந்துள்ளது.

அதன் விவரம்;

1.திருச்சி கிழக்கு
2.மதுராந்தகம்
3.தாராபுரம்
4.பெருந்துறை
5.அம்பாசமுத்திரம்
6.விராலிமலை

இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.