Paristamil Navigation Paristamil advert login

வார இறுதியில் மீண்டும் உயரும் வெப்பநிலை : 35 பாகை வரை அதிகரிக்க வாய்ப்பு!!

வார இறுதியில் மீண்டும் உயரும் வெப்பநிலை : 35 பாகை வரை அதிகரிக்க வாய்ப்பு!!

2 ஆடி 2026 வியாழன் 07:30 | பார்வைகள் : 331


தற்போது தற்காலிகமாக வெப்பநிலை குறைந்திருந்தாலும், இந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்காது என Météo-France எச்சரித்துள்ளது. குறிப்பாக தென்கிழக்கு பிராந்தியங்களில் 1ம் திகதி புதன்கிழமை அன்றும் கடும் வெப்பம் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Rhône பள்ளத்தாக்கு, le Languedoc, la Provence மற்றும்  la Corse பகுதிகளில் பிற்பகல் நேரங்களில் 30 முதல் 35  பாகை வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 2ம் திகதி வியாழக்கிழமை முதல் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் பிராந்தியங்களை மையமாகக் கொண்டு இந்த வெப்ப அலை ஆரம்பமாகும் என்றும், méditerranéen கடற்கரை பகுதிகளில் 33 முதல் 35 பாகை வரை வெப்பம் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த அதிக வெப்பநிலை நாடு முழுவதும் பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் வார இறுதிக்குள் பெரும்பாலான பகுதிகளில் 30 பாகையை மீறும் வெப்பநிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு பகுதிகளில் 35 பாகையை தாண்டிய கடும் வெப்பம் பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்திலும் நிலையான அதிக அழுத்த வானிலை காரணமாக, பருவகால சராசரியை விட அதிகமான வெப்பநிலை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக Météo-France மேலும் குறிப்பிட்டுள்ளது.