Lidlஇல் விசிறிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் சிறப்பு விற்பனையில்!!
1 ஆடி 2026 புதன் 15:11 | பார்வைகள் : 444
Lidl நிறுவனம் ஜூலை 2 வியாழக்கிழமை நாடு முழுவதும் உள்ள தனது அனைத்து கடைகளிலும் 2,00,000இற்கும் அதிகமான விசிறிகள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் குளிரூட்டும் சாதனங்களை சிறப்பு விற்பனைக்கு கொண்டு வருகிறது. புதிய வெப்ப அலை வரவிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனையில் Lidl Plus உறுப்பினர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
- கோபுர விசிறி 19.99 யூரோவிலிருந்து 14.99 யூரோவாகவும்,
- இறக்கை இல்லாத விசிறி 89 யூரோவிலிருந்து 69 யூரோவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
- மொபைல் ஏர் கண்டிஷனர் 179 யூரோக்களுக்கும்
- மேசை விசிறி – 13.49 யூரோவாகவும்
- மினி விசிறி – 34.99 யூரோக்களுக்கும் கிடைக்கும்.
மற்ற கடைகளில் விசிறிகள் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், Lidl பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு பொருட்களை கையிருப்பில் வைத்திருந்ததால், அனைத்து கடைகளுக்கும் ஒரே நேரத்தில் புதிய பொருட்களை விநியோகிக்க முடிந்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 1,600 Lidl கடைகள் இருப்பதால், ஒரு கடைக்கு சராசரியாக 125 சாதனங்கள் மட்டுமே கிடைக்கும். எனவே, இந்த சிறப்பு விற்பனையைப் பயன்படுத்த விரும்புபவர்கள் கடை திறக்கும் நேரத்திலேயே செல்வது நல்லது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan