ஒன்றாரியோ தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலி
16 வைகாசி 2026 சனி 13:12 | பார்வைகள் : 1457
ஒன்ராறியோ மாகாணத்தின் சாப்லோ (Chapleau) பகுதியில் 14.05.2026 வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மே 14 ஆம் திகதி காலை 6 மணியளவில், கிங் வீதியில் (King Street) உள்ள குடியிருப்பு ஒன்றில் தீப் பிடித்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) மற்றும் சாப்லோ தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்புப் படையினர் வீட்டிற்குள் சோதனை நடத்தியபோது, ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
உயிரிழந்தவர் குறித்த விபரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் OPP தடயவியல் அடையாள சேவைப் பிரிவினர் மற்றும் மாகாண தலைமைத் தீயணைப்பு அதிகாரி (Chief Fire Marshall) ஆகியோர் இணைந்து தமது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகள் நிறைவடையும் வரை அப்பகுதியைப் பொதுமக்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிங் வீதி வழியாகச் செல்லும் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan