Paristamil Navigation Paristamil advert login

IPL-லில் இருந்து விலகிய ஜேமி ஓவர்டன் - மாற்று வீரரை தேர்வு செய்த CSK

IPL-லில் இருந்து விலகிய ஜேமி ஓவர்டன் - மாற்று வீரரை தேர்வு செய்த CSK

15 வைகாசி 2026 வெள்ளி 13:10 | பார்வைகள் : 143


ஐபிஎல்லில் CSK அணியில் தென்னாப்பிரிக்க வீரர் டயான் பாரஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் ஆக செயல்பட்டு வந்த ஜேமி ஓவர்டன் வலது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்வதாக CSK அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

11 போட்டிகளில் விளையாடியுள்ள ஜேமி ஓவர்டன், 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அத்துடன் பேட்டிங்கிலும் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி வந்தார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ள ஜேமி ஓவர்டனுக்கு மாற்றாக தென்னாப்பிரிக்க வீரர் டயான் பாரஸ்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணியில் அறிமுகமான டயான் பாரஸ்டர் ரூ.75 லட்சத்திற்கு சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

மேலும் இவர் சமீபத்தில் PSL தொடரில் ராவல்பிண்டி அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.