Paristamil Navigation Paristamil advert login

உடல் எடை குறைக்க உதவும் ஓட்ஸ் புட்டு செய்வது எப்படி.?

உடல் எடை குறைக்க உதவும்  ஓட்ஸ் புட்டு செய்வது எப்படி.?

13 வைகாசி 2026 புதன் 13:24 | பார்வைகள் : 194


உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பல உணவுகள் சுவையானவை, சத்தானவை மற்றும் மிதமான எடையை அடைய அல்லது பராமரிக்க உங்கள் இலக்குகளை ஆதரிக்கின்றன. அந்தவகையில் ஓட்ஸ் உணவும் ஒன்று...

புட்டு உடல் எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது. அதுபோல் ஓட்ஸ் கூட உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே அரிசி மாவுக்கு பதிலாக ஓட்ஸைப் பயன்படுத்தி ஆரோக்கியமான புட்டு 10 நிமிடத்தில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - 1 கப்
துருவிய தேங்காய் - தேவைக்கேற்ப
வெல்லம் - இனிப்பிற்கேற்ப
முந்திரி - 5 - 7
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
நெய் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 3 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

ஓட்ஸை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு முறை பல்ஸ் மோடில் அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளுங்கள்.

தற்போது அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அடுத்து ஓட்ஸை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கிடையே அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கட்டியாக பாகு காய்ச்சிக்கொள்ளுங்கள்.
பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் உடைத்த முந்திரியை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

தற்போது அதில் வேக வைத்த ஓட்ஸ் மற்றும் தேவைக்கேற்ப சிறிதளவு உப்பு சேர்த்து அடுத்து ரெடி செய்து வைத்துள்ள வெல்ல பாகை ஊற்றி நன்கு கிளறி கொள்ளவும்.
இறுதியாக அதில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கினால் ஆரோக்கியமான ஓட்ஸ் புட்டு ரெடி.