Paristamil Navigation Paristamil advert login

கேரள மாநில கவர்னராகிறார் நயினார் நாகேந்திரன்?

கேரள மாநில கவர்னராகிறார் நயினார் நாகேந்திரன்?

17 ஆனி 2026 புதன் 12:50 | பார்வைகள் : 460


தமிழக சட்டசபை தேர்தலில்,  பா.ஜ., படுதோல்வி அடைந்தது. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் தோற்றனர்.


இந்நிலையில், தமிழக பா.ஜ.,வில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர, தேசிய தலைமை முடிவெடுத்துள்ளது.

அதன்படி, நயினார் நாகேந்திரனை, கேரள மாநில கவர்னராக நியமிக்க, டில்லி பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  கேரள கவர்னராக இருக்கும் ராஜேந்திர அர்லேகர், தமிழகத்துக்கு முழு நேர கவர்னராக நியமிக்கப்படலாம்.


தமிழக பா.ஜ., தலைவர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்த, தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் விரைவில் தமிழகம் வர உள்ளார். அவரது வருகைக்கு பின், புதிய மாநில பா.ஜ., தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன