Paristamil Navigation Paristamil advert login

ஜி 7 மாநாடு பிரான்ஸில் துவக்கம்; மோடி - டிரம்ப் சந்திப்பு

ஜி 7 மாநாடு பிரான்ஸில் துவக்கம்; மோடி - டிரம்ப் சந்திப்பு

17 ஆனி 2026 புதன் 09:56 | பார்வைகள் : 181


பிரான்ஸ் நாட்டில் ஜி 7 நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு தொடங்கியது. இதில், அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

பிரான்ஸின் லெ பெய்ன்ஸ் நகரில் ஜி 7 மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். மாநாடில் பங்கேற்க வந்த அவரை அதிபர் மேக்ரான் வரவேற்றார்.

தொடர்ந்து  உலகத் தலைவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஐரோப்பிய கவுன்சில்  கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ  கோஸ்டோ, இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி, எகிப்து அதிபர் அப்தெல் ப ட்டா எல் சிசி, அமெரிக்க அதிபர் டிரம்ப்,  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மன் பிரதமர்  பிரெட்ரிக் மெர்ஸ்,  பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி, ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, ஐ ரோப்பிய கமிஷன்  தலைவர் உர்சுலா வென், பிரேசில் அதிபர்  லூயிஸ் இன்னாசியோ  லூலா டா சில்வா ஆகியோருடன் குழுபுகைப்படம் எடுத்தார்.

தொடர்ந்து,  “Forging New Partnerships and Rebuilding International Solidarity,” என்ற தலைப்பின் கீழ் நடக்கும் ஜி7 மாநாட்டில் பிரதமர் பங்கேற்றுள்ளார்.