Paristamil Navigation Paristamil advert login

ரூ.13 லட்சம் கோடி கடன்: வெள்ளை அறிக்கையில் தமிழக அரசு தகவல்

ரூ.13 லட்சம் கோடி கடன்:  வெள்ளை அறிக்கையில் தமிழக அரசு தகவல்

17 ஆனி 2026 புதன் 05:14 | பார்வைகள் : 193


தமிழகத்தின் வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.ரூ.13 லட்சம் கோடி கடன், ரூ.78 ஆயிரத்து 324 கோடி வருவாய் பற்றாக்குறை என தமிழக அரசின் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை; அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்

அப்போது அவர் கூறியதாவது:

தமிழக வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம் அடைந்துள்ளது.வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. ரூ.10 லட்சம் கோடி நேரடி கடன், ரூ.78 ஆயிரத்து 324 கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது. வரலாறு காணாத உச்சம்  ஆகும்.

அரசின் வருவாய் ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 பைசா வட்டிக்கே செலவாகிறது.பொதுத்துறை நிறுவன கடனையும் சேர்த்தால் மாநிலத்தின் உண்மையான கடன் ரூ.13.18 லட்சம் கோடி.

தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபரின் மீதும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 934 ரூபாய் கடன் உள்ளது.முந்தைய அரசு முதலீட்டுக்கு அல்லாமல் அன்றாட செலவுக்கு கடன் வாங்கி உள்ளது.தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.67 ஆயிரம் கோடி வட்டி  மட்டும் செலுத்துகிறது

கனிம வளத்துறையில் வருவாய் இழப்பு பெருமளவில் ஏற்பட்டுள்ளது.கனிம வளத்துறையில் நடந்த ஊழல் வருவாய் இழப்புக்கு முக்கிய காரணம்.பரந்த இயற்கை வளங்கள் இருந்தும் வருவாயை பெருக்கவில்லை.

அண்டை மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தின் ஜிஎஸ்டியும் குறைவாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதி பகிர்வு சரியாக கிடைக்கவில்லை. மாநில ஜிடிபியில் மொத்த வருவாய் அளவு 10ல் இருந்து 8.32 சதவீதம் ஆக சரிவு. கடந்த ஆட்சியில் தனிநபர் கடன் 92 சதவீதம் உயர்ந்துள்ளது. பத்திரப்பதிவில் வழிகாட்டு மதிப்பு குறைக்கப்பட்டதால் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்வு.

தமிழக மின்வாரியத்திற்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன்.

போக்குவரத்து துறையில் மொத்த இழப்பு 72,667 கோடி ரூபாய்.

ஒரு பஸ் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் ரூ.53 இழப்பு  ஏற்படுகிறது. அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்படும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.78.81 செலவாகிறது; ஆனால் வருவாய் ரூ.25 மட்டுமே கிடைக்கிறது

கடனை குறைக்க 20 ஆண்டுகளாக ஒன்றும் செய்யவில்லை. இதுதான் இன்றைய பற்றாக்குறைக்கு காரணம். கடன் வாங்காமல் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை. 2025ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை வரம்பு மீறப்பட்டுள்ளது.

செல்வந்த மாநிலமாக மாறுவதற்கு முன்னரே, முதியோர் மாநிலமாக மாறிவிடுகிறது. குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிராவை விட தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது.

கடன் அளவு மூலதன செலவை விட இருமடங்கு அதிகரித்துள்ளது. மாநிலத்தின் திட்டங்களுக்கு 13 ச தவீதம் மட்டுமே செலவு செய்யப்படுகிறது.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தால் செலவு அதிகரித்துள்ளது. வட்டி, சம்பளம் ஓய்வூதியத்திற்கு மொத்த நிதியில் 64 சதவீதம் செலவாகிறது.

தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும், பிற மாநில குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் அதிகளவு கடனுடன் பிறக்கின்றன.

போக்குவரத்து கழகங்கள் வருவாயை உயர்த்தாமல் செலவினத்தை இருமடங்காக்கி உள்ளது. நுகர்பொருள் வாணிக கழகத்தின் மூலதன  கடன் 27,181 கோடியாக உயர்ந்துள்ளது. மின்துறையில் வருாவாய்க்கும் செலவுக்கும் உள்ள இடைவெளி 1.45 லட்சம் கோடி

வருவாய் பற்றாக்குறை கோவிட் காலத்தை விட அதிகரித்துள்ளது. முத்திரைத்தாள் கட்டணம் சந்தை மதிப்பை விட குறைவாக உள்ளது .வருவாய் இழப்பும் மாநிலஉள்நாட்டு உற்பத்தி மைனஸ் 2.2 ஆக குறைவு.புதிய ஓய்வூதிய திட்டத்தால்ஆண்டுக்கு கூடுதலாக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு

தமிழகத்தின் கடன் 5 ஆண்டுகளில் 18 லட்சம் கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி போனற்ற்றுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவிட்டாலும் அதற்கான வருவாயை பெருக்கவில்லை. மின்பகிர்மானத்திற்கு 1,07,365 கோடி கடன் உள்ளது.

நலத்திட்டங்களுக்கு புதிய வரி விதிக்கும் திட்டமில்லை. சீர்திருத்தங்கள் மூலம் புதிய திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நிதி நிலையில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது: வெள்ளை அறிக்கையில் தமிழக அரசு தகவல்

100 ரூபாய் வரவு என்றால் ரூ.145 செலவாகிறது. ஊழல் இல்லாத அரசால் இதனை சமாளிக்க முடியும்.

வருவாய்க்கு மேல் செலவு என்ற நிலையை மாற்றிக் காட்டுவோம். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

ஊழலற்ற ஆட்சி முறையால் இதுபோன்ற சூழ்நிலையை சரி செய்ய முடியும். மாநிலத்தின் வரி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.