Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவின் 50 படத்தை இயக்கும் நெல்சன்?

சூர்யாவின் 50 படத்தை இயக்கும் நெல்சன்?

16 ஆனி 2026 செவ்வாய் 16:35 | பார்வைகள் : 392


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் சூர்யா. சிங்கம் 2 மெகா ஹிட்டுக்கு பின் சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. இடையில் ஜெய் பீம், சூரரைப் போற்று திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் அந்த திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை. மாறாக ஓடிடியில் வெளியானது. சூர்யாவின் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கங்குவா திரைப்படம் பாக்ஸ் சரியாக போகவில்லை. அடுத்த வெளியான ரெட்ரோ திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது..

அதேநேரம் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்து 340 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது
. இந்நிலையில்தான், சூர்யாவின் 50வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க வாய்ப்பிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.

சூர்யாவின் 48வது திரைப்படமாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகவுள்ளது. 49வது படமாக மலையாள பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சூர்யா தற்போது நடத்து வரும் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது..