கோடை பயணத்திற்கான சிறப்பு சலுகை: குறைந்த கட்டணத்தில் TGV பயணச் சீட்டுகள்!!
16 ஆனி 2026 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 597
தேசிய தொடருந்து சேவை நிறுவனமான SNCF Voyageurs, கோடை கால பயணங்களை முன்னிட்டு சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் மாதம் 16ம் திகதி முதல் 18ம் திகதி வரை மூன்று நாட்கள் மட்டும், குறைந்த கட்டணத்தில் 1 லட்சம் TGV Inoui தொடருந்து பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டுகள் 19 யூரோக்களிலும், முதல் வகுப்பு பயணச் சீட்டுகள் 29 யூரோக்களிலும் வழங்கப்படுகின்றன.
இந்த சலுகை பயணச் சீட்டுகள் ஆகஸ்ட் மாதம் 3 முதல் 31ம் திகதி வரை நடைபெறும் பயணங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பயணச் செலவுகளை குறைத்து, அவர்களின் கொள்முதல் திறனை பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று SNCF Voyageurs வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் மாதம் 22ம் திகதி முதல் இளைஞர்களுக்கான புதிய சலுகைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக Ouigo தொடருந்து சேவைகள் மற்றும் Avantage Jeune அட்டைகளில் கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வழக்கமான கோடை காலத்தை விட இரு மடங்கு அதிக அளவில் சலுகை பயணச் சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதால், அதிகமானோர் குறைந்த கட்டணத்தில் தங்கள் உறவினர்களை சந்திக்கவும் விடுமுறை பயணங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan